தமிழ் வாசம்


 இந்தப் பக்கம் தாய்த் தமிழுக்காக. தமிழ்மொழி, தமிழிலக்கியம், தமிழ் அறிஞர்கள் போன்ற தமிழ் பற்றிய சிந்தனைகளுக்காகவும், குறிப்புகளுக்காகவும், விவாதங்களுக்காகவும் இந்தத் தமிழ் வாசம்.

 



          அச்சம் தவிர்


           அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
           அஞ்சல் அறிவார் தொழில்

என் பள்ளி நாட்களில் நான் முதன் முதலாய் இக்குறளைப் படித்து அர்த்தம் தெரிந்து கொண்ட நாளில் இருந்து எனக்கு மிகப் பிடித்த குறளாக இருக்கிறது.
காரணம், இதில் உள்ள வினையான 'அஞ்சுதல் ' என்ற சொல்லை எடுத்து விட்டு வேறு எந்த வினைச் சொல்லை நிரப்பினாலும் பொருள் தரக் கூடிய குறள் இது. முக்கியமாக மனிதன் செய்ய வேண்டிய ஒரு காரியம் அல்லது மனித உணர்ச்சி - இவற்றைக் குறிக்கும் வார்த்தையை இட்டு நிரப்பினால் மனிதனுக்கு தேவையான சிறந்த அறிவுரையாகும்.
எடுத்துக் காட்டு:  'தவிர்த்தல் ' 'பேசுதல்', 'உண்ணுதல்'
             
               தவிர்ப்பது தவிர்க்காமை பேதைமை தவிர்ப்பது
               தவிர்த்தல் அறிவார் தொழில்