நேற்று தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பார்த்த ஒரு உண்மை வாழ்க்கை பற்றிய செய்தி மனதைக் கனமாக உணரச் செய்தது. அது சென்னையில் வாழும் பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த ரஞ்சிதம் என்ற ஒப்பற்ற ஒரு தாயைப் பற்றியது.
அந்த நிகழ்ச்சியில் அவரின் குழந்தையை மையமாக வைத்துப் பேசியிருந்தாலும், எனக்கு மனதில் பதிந்தது, அந்தத் தாயின் வலிதான். துன்பத்தைப் பகிர்ந்து கொள்ள கணவனும் இல்லை, பெற்ற பிள்ளைகளும் இல்லாத நிலையில் தன் 65 வயதிலும் வீட்டு வேலை செய்து தன் 43 வயது பெண் குழந்தையைக் காப்பாற்றும் அவரது துணிவும், எப்படியும் தன் குழந்தையைக் காப்பாற்ற வேண்டும் என்ற அவரது முனைப்பும் பகட்டான இந்த கார்ப்பரேட் உலகத்துக்குப் புரியுமா?
43 வயது என்றும் குழந்தை என்றும் முரண்பாடாகச் சொல்லப் படக் காரணம், ரஞ்சிதம் அவர்களின் பெண்ணுக்கு 43 வயது ஆனாலும் 2 வயது குழந்தைக்குரிய உடல், மன வளர்ச்சிதான் இருக்கிறது. குளிப்பாட்டுவது, உணவு ஊட்டுவது என்று எல்லாவற்றையும் அம்மாதான் செய்து விட வேண்டியிருக்கிறது இந்த 43 வயது பெண்ணுக்கு.
வீட்டு வேலை செய்து பிழைக்கும் ரஞ்சிதம் அவர்கள், வேலை செய்யும் இடம் முதல் எங்கு சென்றாலும் தன் பெண்ணைத் தூக்கிக் கொண்டு செல்ல வேண்டியிருக்கிறது. இந்தக் கஷ்டங்களை எல்லாம் விடத் தன் பெண் எல்லாரையும் போல ஒரு வாழ்க்கை வாழ முடியாமல் இருப்பதும், அவளைப் பார்ப்போர் பைத்தியம் என்று ஏளனம் செய்வதும் தான் அவருக்குச் சொல்ல முடியாத துயரமாக இருக்கிறது என்பதை உணர முடிகிறது.
"நான் செத்துப் போயிட்டா நீ யார் கிட்ட இருப்ப?" என்று சிரித்துக்கொண்டே தன் குழந்தையிடம் அடிக்கடி கேட்கிறார் ரஞ்சிதம். அந்த சிரிப்பின் உள்ளே இருக்கும் வலியின் ஆழம் நமக்குப் புரிகிறது. "நான் இறந்து போனால் என் மகளும் இறந்து விட வேண்டும், அது தான் நல்லது..." என்கிறார் ரஞ்சிதம். கஷ்டப் படும் ஏழைகளுக்காக இதோ நான் இருக்கிறேன் என்று பல யுகங்களாக அறிக்கை விட்ட படியிருக்கும் ஏதாவது ஒரு சாமி ரஞ்சிதம் இருக்கும் போது இல்லாவிட்டாலும் அவரது மறைவுக்குப் பின் அவரது மகளைக் காப்பாற்றட்டும்.
இரண்டு வருடங்கள் வரை நம் குழந்தையைத் தூக்கிக் கொண்டு வெளியில் செல்வதே நம்மில் பலருக்குக் கஷ்டமாக இருப்பதால் வீட்டில் பார்த்துக் கொள்ள ஒருவரைத் தேடுகிறோம். ஆனால் ஒரு தாய் 43 வருடமாகத் தன் பெண்ணைச் சுமப்பது முடிகிற காரியமா? இப்படிப்பட்ட ஒரு தாய்க்கு என்ன விருது வழங்க முடியும் இந்த அரசாங்கத்தால்? என்ன அங்கீகாரம் கொடுக்க முடியும் இந்த சமூகத்தால்? பத்மபூஷண் தொடங்கி பாரத ரத்னா வரை கொடுக்கப் படும் விருதுகளுக்கு சாமான்ய மக்கள் அருகதையற்றவர்கள் என்றால் மக்களாட்சி என்பதற்கு என்ன தான் பொருள்?
இந்தத் தாயின் தேவை தன்னையும், தன் குழந்தையையும் காப்பாற்றும் அளவு சம்பாதிக்க ஒரு நல்ல வேலை. அவர் யாரிடமும் பொருளுதவி யாசிக்க விரும்பவில்லை. நாட்டை ஆளும் நாயகர்களோ, மக்களின் கவனத்தை ஆளும் நடிகர்களோ, பணத்தை ஆளும் பன்னாட்டு வணிகர்களோ - சக மனிதர்களில் யாராவது ஒருவராவது குறைந்த பட்சம் அவருக்கு ஒரு வேலையாவது ஏற்பாடு செய்து தர முன் வருவார்களா?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக