சில நாட்களுக்கு முன் தொலைக்காட்சியில் பார்த்த மனதைத் தொட்ட இன்னொரு நிகழ்வு இது. பிறந்து இரண்டே நாட்கள் ஆன ஒரு பெண் குழந்தை தான் இந்த உலகை விட்டுப் பிரிந்தாலும், தன் கண்களைத் தானம் கொடுத்து விட்டுச் சென்றிருக்கிறது.
சென்னையைச் சேர்ந்த ஆரோக்கிய தாஸ், ஒரு சிறு உணவகத்தில் சமையல்காரராக வேலை செய்து சம்பாதிப்பவர். தன் ஏழ்மையின் காரணமாக தனியார் மருத்துவமனையில் சேர்க்க முடியாமல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணியான தன் மனைவியைப் பிரசவத்துக்காக சேர்த்திருக்கிறார். பெண் பிறப்பாள் என்ற ஆசையில் காத்திருந்தவருக்குப் பெண் குழந்தையும் பிறந்திருக்கின்றது. அவரின் மகிழ்ச்சி அதிக நேரம் நிலைக்கவில்லை.
குழந்தையின் எடை மிகக் குறைவாக இருப்பதாகவும், இதயத்துடிப்பு சீராக இல்லை என்றும், அதனால் குழந்தையைத் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்திருப்பதாகவும் மருத்துவர்கள் அவரிடம் சொன்னதைக் கேட்டுக் கலங்கிப் போன அவர் கடவுளின் மேல் பாரத்தைப் போட்டு விட்ட நம்பிக்கையுடன் எப்படியாவது தன் மகள் உயிரோடு தன்னிடம் வந்துவிடுவாள் என்று நம்பிக்கையோடு இருந்திருக்கிறார். ஆனால் பிறந்த இரண்டாம் நாள் அவரின் மகள் இறந்து விட்டாள். அப்பேர்ப்பட்ட துயரத்திலும் சிவகுமார் என்ற சமூக ஆர்வலரின் அறிவுரையினை ஏற்று அச்சிறு குழந்தையின் கண்களைத் தானம் செய்திருக்கிறார், ஆரோக்கிய தாஸ்.
"என் மகள் எங்களை விட்டுப் போய்விட்டாலும், அவளது கண்கள் இந்த உலகத்தைப் பார்க்க முடிந்தது, அது எனக்கு மகிழ்ச்சி தான்." என்கிறார் ஆரோக்கிய தாஸ்.கொடுத்தாலும் குறையாத செல்வத்தை உடையவர்கள் கூட கொடுப்பதற்குத் தயங்குகிறார்கள். ஆனால், இந்த ஏழையின் மனது எவ்வளவு பெரியது?
இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே யுள.
இக்குறளின் பொருள் உணர்ந்தவர்களுக்கு மட்டுமே தெரியும், உயர்குடிப் பிறந்தவர் என்றால் யாரென்பது. பணமோ, சாதியோ ஒருவனை உயர்ந்தவன் என்று இச்சமூகத்துக்கு அறிமுகப் படுத்தலாம். ஆனால், சக மனிதனின் கஷ்டம் உணர்ந்தவனே உயர்ந்தவனாக அறியப் படுவான்.
அன்னை தெரெசாவோ, ஹெலென் கெல்லரோ பிறக்கும் போதே உலகம் போற்றுபவர்களாகப் பிறந்து விடவில்லை. அவர்கள் வாழ்ந்த வாழ்க்கைதான் உலகுக்கு அவர்களை உயர்ந்தவர்களாக அறிவித்தது.
கண் தானம் செய்யுங்கள், கண் தானம் செய்யுங்கள் என்று உலகம் முழுதும் பரப்புரை செய்யும் உயர்சாதி அமைப்புகள் இந்தக் குழ்ந்தைக்கும் அதைப் பெற்றவருக்கும் சிலை எடுத்து, அவர்கள் புகழ் பாடி மரியாதை செய்யட்டும்.
இறந்து விட்ட போதிலும் இறவாச் செயல் புரிந்த அந்தக் குழந்தைக்கு நாம் செய்யும் மரியாதை, நம் கண்களைத் தானம் செய்வது தான்.
மனம் படைத்தவர்களே! கண் தானம் செய்யுங்கள்.
.

(குறள் எண்: 223)
இதன் பொருள்: தமக்குள்ள வறுமைத் துன்பத்தைக் காட்டிக் கொள்ளாமல் பிறருக்கு ஈவது உயர்ந்த குடிப்பிறந்தவரின் பண்பாகும்.
இக்குறளின் பொருள் உணர்ந்தவர்களுக்கு மட்டுமே தெரியும், உயர்குடிப் பிறந்தவர் என்றால் யாரென்பது. பணமோ, சாதியோ ஒருவனை உயர்ந்தவன் என்று இச்சமூகத்துக்கு அறிமுகப் படுத்தலாம். ஆனால், சக மனிதனின் கஷ்டம் உணர்ந்தவனே உயர்ந்தவனாக அறியப் படுவான்.
அன்னை தெரெசாவோ, ஹெலென் கெல்லரோ பிறக்கும் போதே உலகம் போற்றுபவர்களாகப் பிறந்து விடவில்லை. அவர்கள் வாழ்ந்த வாழ்க்கைதான் உலகுக்கு அவர்களை உயர்ந்தவர்களாக அறிவித்தது.
கண் தானம் செய்யுங்கள், கண் தானம் செய்யுங்கள் என்று உலகம் முழுதும் பரப்புரை செய்யும் உயர்சாதி அமைப்புகள் இந்தக் குழ்ந்தைக்கும் அதைப் பெற்றவருக்கும் சிலை எடுத்து, அவர்கள் புகழ் பாடி மரியாதை செய்யட்டும்.
இறந்து விட்ட போதிலும் இறவாச் செயல் புரிந்த அந்தக் குழந்தைக்கு நாம் செய்யும் மரியாதை, நம் கண்களைத் தானம் செய்வது தான்.
மனம் படைத்தவர்களே! கண் தானம் செய்யுங்கள்.
மேலும் விவரங்களுக்கு
S.V.G.Subramanian
Deputy Manager - Eye Bank, Sankara Nethralaya,
18, College Road, Chennai - 600 006,
PH: 044 28281919 , 044 42271830, 044 28226694.
e-mail: svgs@snmail.org

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக