நான் எழுதி நிறைய வருடங்கள் ஆகி விட்டன. வலைப்பூ என்னும் அறிவியல் அதிசயத்துக்கு நன்றி. நான் மீண்டும் எழுத ஆரம்பித்து விட்டேன். என் போல எண்ணுவோர் இன்னும் இருக்கிறார்கள் என்று வலுவாக நம்புகிறேன்.
நேற்று ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒரு திரைப்பட இயக்குநர் சொன்ன ஒரு வாக்கியம் என்னை இன்றே எழுதத் தூண்டியது. "ஒரு மாட்டு வண்டி கூட பாதையில் சுவடு பதித்துச் செல்கிறது. மனிதனாகிய நான் சுவடு பதித்துச் செல்ல வேண்டாமா?..." என்றார் அவர். தற்போது என்னால் செய்ய முடிந்த ஒரு செயலை இதற்கு மேலும் தள்ளிப்போடாமல் இன்றே செய்ய முடிவெடுத்து முயற்சி செய்கிறேன்.
விடிந்தும் விடியாத காலைப் பொழுதில், அந்த வாக்கியத்தையே மனதில் அசை போட்டவாறு என் வீட்டு பால்கனியில் நின்று பார்த்த போது தெருவில் எதிர்சாரியில் படுத்திருந்த மாட்டைப் பார்த்தேன். சுவடு, மாட்டு வண்டி, பாதை என்கிற வார்த்தைகளை என் வாய் உச்சரித்தே பல காலம் ஆகிவிட்டதையும், இயல்பான, என் மனதுக்கு இசைந்த வாழும் சூழலை விட்டு விலகி நான் வாழ நேர்ந்த நிலைமையையும் மற்றுமொரு முறை நினைவு கூற நேர்ந்தது. இதே போன்ற மனநிலையில் எவ்வளவோ பேர் இருப்பார்கள் என்ற நினைவும் வந்தது. அவர்களுக்காகவும், எனக்காகவும் இதோ இந்த வலைப்பூ.
இனி முடியும் போதெல்லாம் எழுதுவேன்.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக