அடி பைப்பு என்றால் எதைக் குறிக்கும் என்று இன்றைய 'செல் ஃபோன் தலைமுறை'க்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, அதிலும் சென்னை போன்ற பெருநகர வாசிகளுக்கு. கிராமங்களில் இன்னும் இந்த வார்த்தை புழக்கத்தில் உள்ளதா என்று தெரியவில்லை.(நான் கிராமங்களை விட்டு வெகுதூரம் வந்து ரொம்ப நாள் ஆகிவிட்டது) ஏனென்றால், கிராமங்களில் இப்போது 'அடி பைப்பு' இல்லை என்றே நினைக்கிறேன்.
பள்ளி விடுமுறையின் போது கிராமத்தில் இருக்கும் என் பாட்டி வீட்டுக்குப் போகும் ஒவ்வொரு முறையும், சிறு பிள்ளைகள் எல்லோருக்கும் வீட்டின் எதிரில் இருக்கும் அந்த அடி பைப்பில் நீரில் விளையாடுவது எவ்வளவு மனதுக்குகந்த ஒரு விளையாட்டாக இருந்தது என்பதைப் பார்த்திருக்கிறேன். அப்போதெல்லாம் நல்ல தண்ணீருக்காக ஒவ்வொரு தெருவிலும் ஒரு அடி பைப்பு இருந்தது.(இப்போது சென்னையின் பல தெருக்களில் ஒரு தண்ணீர் குழாய் கூட இல்லை -வழிப்போக்கர்களின் தாகம் தீர்க்க..)
வெய்யில் காலங்களில் அந்த அடி பைப்பைச் சுற்றிலும் தேங்கியிருக்கும் தண்ணீரில் படுத்து மாடுகளோ நாய்களோ இளைப்பாறுவதைப் பார்த்திருக்கிறேன். விடியற்காலை நேரங்களில் அடி பைப்பின் அந்த 'க்கீச்.. க்கீச்' ஒலியில் தான் பொழுது விடிந்து விட்டது என்று கண் விழித்திருக்கிறேன். தண்ணீர் மட்டம் குறைந்து விடும் உச்சி வெய்யில் காலங்களில் பைப்பின் குழாயை ஒரு கையால் பொத்தி மூடிக் கொண்டு, மேற்புறம் உள்ள துளையில் சிறிது நீர் ஊற்றிய பின் விடாமல் அடித்துத் தண்ணீர் மட்டம் மேலேறியதும் பாத்திரத்தில் நிறைத்துக் கொள்வது ஒரு தனி கலை.
என் தாத்தா குடிக்கத் தண்ணீர் கொண்டு வரச் சொல்லும் போதெல்லாம், அவருடைய பெரிய சொம்பை எடுத்துக் கொண்டு கூட விளையாடிக் கொண்டிருந்தவர்களில் யாராவது ஒருவரை உதவிக்குக் கூட்டிக் கொண்டு( "நீ பைப்பை அடி... நான் சொம்பில் தண்ணீர் பிடிச்சுக்கறேன்..") போய் 'சுடச் சுட' பைப்பை அடித்துக் குளிர்ந்த நீரைத் தாத்தாவுக்குக் கொடுத்திருக்கிறேன்.
என் தாத்தா வளர்த்த புறாக்களில் ஒன்று, தினமும் காலையில் அந்த அடி பைப்பு தண்ணீரில் குளித்து விட்டுச் சிறகுகளை வெய்யிலில் காய வைத்து விட்டு வந்து தாத்தா குடிக்கும் காபியில் பங்கு கேட்டு குடிக்கும் என்று அம்மா சொல்லக் கேட்டு வியந்து இருக்கிறேன்.
பெரியவர்கள் யாரும் பார்க்காத நேரத்தில் ஓடிப் போய் அடி பைப்பை அடித்து தண்ணீரை மேலே ஊற்றி விளையாடி அம்மாவிடம் மாட்டிக் கொண்டு திட்டு வாங்கி தாத்தா, பாட்டி பரிந்து பேசி எங்களை அணைத்துக் கொண்ட நாட்கள் இன்னும் என் நினைவில் இருக்கின்றன.
என் பாட்டி வீட்டில் கழித்த என் சிறு வயது நாட்களில் அந்த அடி பைப்பு ஒரு விளையாட்டுத் தோழனாகவே இருந்தது புரிகிறது. லேசாக இரும்பின் வாசம் வீசும் குளிர்ந்த அந்த அடி பைப்புத் தண்ணீரின் சுவைக்காக மனசு ஏங்கும் சில நிமிஷங்களில் நினைவு வருகிறது நெல் வயல்களின் வாசம் வீசும் அந்த கிராமத்தில் நிறைந்திருந்த அழகும் அன்பும்.
எப்போதாவது கிராமத்திலிருந்து அப்பா, அம்மாவைப் பார்க்க வரும் சொந்தங்களைப் பார்க்க நேரும் போதெல்லாம் அவர்களிடம் கேட்கிறேன், "அந்த அடி பைப்பில் இன்னும் தண்ணீர் வருதா?"

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக